Solli Vidu Velli Nilave (சொல்லிவிடு வெள்ளி நிலவே) From Amaidhi Padai
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா
TamillyricswaWorld
Solli Vidu Velli Nilave
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் காய்ந்து போன பின் நானே என்னை தேற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா Solli Vidu Velli Nilave
உன்னை ஒரு போதும் உள்ளம் மறவாது நான் தான் வாழ்ந்தேன் you
குற்றம் புரியாது துன்பக்கடல் மீது ஏன் நான் வீழ்ந்தேன்
அந்த கதை முடிந்த கதை எந்தன் மனம் மறந்த கதை
என்ன செய்ய விடுகதை போல் என்னுடைய பிறந்த கதை
காலங்கள் தான் போன பின்னும் காயங்கள் ஆறவில்லை ஓ வேதனை தீரவில்லை
தொட்ட குறையாவும் விட்ட குறையாகும் வேண்டாம் காதல் ஓ
எந்தன் வழி வேறு உந்தன் வழி வேறு ஏனோ கூடல்
உன்னுடைய வரவை எண்ணி உள்ள வரை காத்திருப்பேன்
என்னை விட்டு விலகி சென்றால் மறுபடி தீக்குளிப்பேன்
நான் விரும்பும் காதலனே நீ எனை ஏற்றுக்கொண்டால் நான் பூமியில் வாழ்ந்திருப்பேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்ம
காதல் என்னும் தீபமே கண்ணில் நானும் ஏற்றினேன்
காற்றில் சாய்ந்து போகுமா நெஞ்சில் வைத்து ஏற்றினேன்
சொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே
உறவுகள் கசந்ததம்மா ஓ கனவுகள் கலைந்ததம்மா
உறவுகள் கசந்திடுமா ஓ கனவுகள் கலைந்திடுமா
Comments